பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்

பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது. 6 நாட்களில் ரூ.750 கோடி வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்த வசூல் ரூ.1,000 கோடியை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் சிபாரிசு செய்வேன். பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்துவேன்” என்றார்