மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் :பிரதமர் மோடி இரங்கல் .

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் :பிரதமர் மோடி இரங்கல் .

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் :பிரதமர் மோடி இரங்கல் . மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக இருந்த அனில் மாதவ் தவே இன்று உடல் நல கோளாறு காரணமாக உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

60வயதான இவர்  மத்திய பிரதேச  மாநிலம் உஜ்ஜையினை சேர்ந்தவர்.பாராளுமர்நர மாநிலங்களவையில் எம்.பி.யாக  கடந்த  2009-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.இதனிடையே டெல்லியில் நேற்று காலமானார்.இவருடைய இறப்பிற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்"என்னுடன் பணியாற்றும் மிகவும் மதிப்பிற்குரிய ஒருவரான அனில் மாதவ் தவே திடீரென காலமானார் என செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னுடையை இரங்கலை தெரிவிக்கிறேன். அனில் மாதவ் தவே ஜி ஒரு அர்ப்பணிக்கப்பட்ட பொது ஊழியராக நினைவில் இருப்பார்"என தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில்   தனிச்சட்டம் இயற்றியதில் அணில் மாதவ் தவே பங்கு முக்கியமானதாகும்.