முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சிபிஐ விசாரணை: தந்தை ஜீவானந்தம் வலியுறுத்தல்

முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சிபிஐ விசாரணை: தந்தை ஜீவானந்தம் வலியுறுத்தல்

முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரின் தந்தை ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ஜேஎன்யுவில் ஆராய்ச்சி மாணவரான முத்துக்கிருஷ்ணன், அவரது நண்பரின் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவரது தந்தை ஜீவானந்தம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை உடலை வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.