பாலிவுட் நடிகை ரீமா லாகு காலமானார்..!

பாலிவுட் நடிகை ரீமா லாகு காலமானார்..!

பாலிவுட் உலகின் மூத்த கலைஞரான ரீமா லாகு மாரடைப்பால் மும்பையில் காலமானார்.

1970-ல் தனது சினிமா பயணத்தை துவக்கிய ரீமா ஷாருக், சல்மான் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ரீமாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மும்பையில் உள்ள  திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி  ரீமா உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.