சத்தமில்லாமல் 400சிசி பைக் தயாரிக்கும் பஜாஜ்

சத்தமில்லாமல் 400சிசி பைக் தயாரிக்கும் பஜாஜ்

மோட்டார் சைக்கிள் விற்பனையில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம் புதிய 400சிசி பைக்கைத் தயாரித்து வருகிறது.

இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல்சர் மாடல் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி 15 வருடங்கள் ஆகிறது. இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் புதிய 400சிசி என்ஜின் திறனுடன் கூடிய மோட்டார் சைக்கிளை மகராஷ்ட்ராவில் உள்ள தொழிற்சாலையில் பஜாஜ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால், அந்த பைக்கின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து சோதனையில் இருக்கும் இந்த மாடல் பைக்குகள் அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.