ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளி

ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாக்ஷி மாலிக், சரிதா ஆகியோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா இறுதிப் போட்டிக்கு வந்தார். இறுதிப்போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையிடம் சரிதா தோல்வி அடைந்தார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.