தவறவிட்ட முரளி விஜய்; தாக்குப்பிடித்த புஜாரா

தவறவிட்ட முரளி விஜய்; தாக்குப்பிடித்த புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து களத்தில் உள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட்டில், முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 451 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை அசராமல் ஆடி வருகின்றனர். இதில் தமிழக வீரர் முரளி விஜய் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், மற்றொரு வீரரான புஜாரா 130 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் தொடர்ந்து உள்ளார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது.