சவுதியில் மாயமான 27 இந்தியர்கள்

சவுதியில் மாயமான 27 இந்தியர்கள்

சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா சென்ற 27 இந்தியர்கள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்ட்ரா மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு 27 பேர் மும்பையில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் சுற்றுலா சென்றனர். ஆனால், ஜெட்டா சென்றடைந்த அவர்கள் ஹோட்டல் அறைக்கோ வரவில்லை. அதேபோல திட்டமிட்ட நாளில் இந்தியா திரும்பவும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு காவல்துறைக்கு டிராவல் ஏஜென்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், அவர்கள் கடத்தப்பட்டார்களா அல்லது சிரியாவுக்குப் பயணித்து ஐஎஸ் தீவிரவாத இயக்கதில் இணைந்து கொண்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.