மத்திய அரசு பணிக்கு 2.80 லட்சம் வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணிக்கு 2.80 லட்சம் வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல், வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மத்திய அரசின் ப ல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல், வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.