10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மறுகூட்டலுக்கு இன்று முதல் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம்  நடந்து முடிந்தது. 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு  இன்று காலை 10மணிக்கு வெளியிடப்பட்டது. மறுகூட்டலுக்கு 19-ம் தேதி முதல் 22-ம் தேதி மாலை 5.45 வரை  விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலத்துக்கு தலா ரூ.305, மற்ற பாடங்களுக்கு  தலா ரூ.205 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.