நான் ஓட்டு போட்டத யாருக்கும் சொல்ல மாட்டேன் - முதல்வர் பழனிச்சாமி

நான் ஓட்டு போட்டத யாருக்கும் சொல்ல மாட்டேன் - முதல்வர் பழனிச்சாமி

14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் துவங்கியது.

குடியரசுத் தேர்தல், வாக்குப்பதிவு சரியாக காலை 10 மணிக்கு நாடுமுழுவதும், அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தொடங்கியது. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்து வருகின்றனர்.

தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் நபராக தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின் பேசிய முதல்வர், “இது ஜனநாயக முறையில் நடைப்பெறுகின்றது. யாருக்கு வாக்களித்தோம் என தெரிவிக்கக் கூடாது என்பது விதி. அதனால் யாருக்கு வாக்களித்தேன் என்பதை யாருக்கும் சொல்ல மாட்டேன்.” என தெரிவித்தார்.

தேர்தலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ், பொன் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மற்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்