ரூ.2800 தள்ளுபடி செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்: ப்ளிப்கார்ட்டில் மட்டும்

ரூ.2800 தள்ளுபடி செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்: ப்ளிப்கார்ட்டில் மட்டும்

சாம்சங் கேலக்ஸி ஏ5 2017 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.2,810 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை ப்ளிபிகார்ட் தளத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்ட் சாம்சங் கேலக்ஸி ஏ5 2017 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.2,810 தள்ளுபடி செய்துள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.31,800க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி ஏ5 2017 ஸ்மார்ட்போனின் விலையில் தற்சமயம் 8 சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கேலக்ஸி ஏ5 2017 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.28,990க்கு வாங்கிட முடியும். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கேலக்ஸி ஏ5 2017 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ7 2017 ஸ்மார்ட்போனினையும் சாம்சங் வெளியிட்டது.