“நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்” பான்டுக்கு தெண்டுல்கர் புகழாரம்

“நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்” பான்டுக்கு தெண்டுல்கர் புகழாரம்

குஜராத்துக்கு எதிராக 9 சிக்சருடன் 97 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ரிஷாப் பான்ட் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

குஜராத்துக்கு எதிராக 9 சிக்சருடன் 97 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ரிஷாப் பான்ட் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டிய பிரபலங்கள் வருமாறு:-

சச்சின் தெண்டுல்கர் (இந்திய ஜாம்பவான்): 10 ஐ.பி.எல். தொடர்களில், நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று.

சவுரவ் கங்குலி (முன்னாள் கேப்டன்): ரிஷாப் பான்ட், சஞ்சு சாம்சன்...இரவில் அற்புதம் காட்டி விட்டனர். இருவரும் சிறப்பு வாய்ந்தவர்கள். அணியில் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

ரோகித் சர்மா (மும்பை கேப்டன்): டெல்லியில் ‘பான்ட் புயல்’ உருவாகி விட்டது. பயமில்லாத ஒரு ஆட்டம். சதத்திற்கு தகுதியானவர்.

ஷேவாக் (முன்னாள் வீரர்): தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பேட்ஸ்மேனை நேசிக்கிறேன். அந்த வகையில் நம்பிக்கையுடன் பந்தை அடித்து விளாசுவதற்கான சிறப்புத்திறமை ரிஷாப் பான்டிடம் இருக்கிறது. அது வெளிப்பட்டு இருக்கிறது.