ரயில் முன் பாய்ந்தும் உயிருடன் தப்பிய அதிசய பெண்மணி!!

ரயில் முன் பாய்ந்தும் உயிருடன் தப்பிய அதிசய பெண்மணி!!

காட்கோபரில் ரயில் முன் பாய்ந்த பெண் எந்தக் காயமும் இல்லாமல் உயிருடன் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே நடந்துள்ளது. ஆனால், இன்றுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரயில்வே அதிகாரிகளை இதை கண்டறிந்துள்ளனர்.காட்கோபர் ரயில் நிலையத்தில் முன் நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்த பெண் ஒருவர் ரயில் வந்து கொண்டிருக்கும்போது வந்து நின்றார். ரயில் அருகில் வரும்போது, திடீரென ரயில் முன் பாய்ந்தார். அனைவரும் அந்தப் பெண் இறந்துவிட்டதாகவே கருதி அதிர்ச்சியில் உறைந்தனர். ரயிலின் கீழே குனிந்து பார்த்தனர். ரயில் செல்லும் வரை காத்திருந்தனர். பின்னர் ரயில் சென்ற பின்னர், பார்த்தால் அந்தப் பெண்ணைக் காணவில்லை.
ரயில்வே அதிகாரிகள் சிசிடிவி கேமராவில் பார்த்தபோதுதான் அந்தப் பெண் எந்தக் காயமும் இல்லாமல் தண்டவாளத்தைக் கடந்து, பிளாட்பாரத்தில் ஏறி, மேம்பாலம் வழியாக சென்றது தெரிய வந்துள்ளது.