யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். மகளிர் ஆணையத்திற்கு கமல் பதில்

யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். மகளிர் ஆணையத்திற்கு கமல் பதில்

சமீபத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கு சம்பந்தமாக அவரது பெயரை கூறி கருத்து சொன்ன கமல்ஹாசனுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'நான் பெண்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். காரணம் இன்றி நான் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். குற்றவாளியை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் அவர்களது கோரிக்கை உள்ளது.

பலாத்கார வழக்கில் நடிகையின் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். உங்களுடைய கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. நான் அவர் பெயரை கூற கூடாதா? என்னுடைய தாய்க்கும், மகளுக்கும் அடுத்தபடியாக அவரை நினைத்தேன். மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனிடம் யுத்தம் செய்வது போல் உள்ளது' என்று கமல் கூறியுள்ளார்.