வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு : CSK ரிட்டர்ன்!

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு : CSK ரிட்டர்ன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதை அடுத்து, மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட, விசில் போட ரெடியாகிவிட்டது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அதோடு அனைத்து ஐபிஎல் போட்டியிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி இதுதான்.

இந்நிலையில் கடந்த 2015ல் சுதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்றோடு (வியாழக்கிழமை) முடிந்துவிட்டது.

இதனால் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்க உள்ளது. இதுகுறித்து, அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில், ’வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு...விசில் போடு’ தெரிவித்துள்ளது.

2015ல் ஆடிய அதே அணியை மீண்டும் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அப்படி பழைய வீரர்கள் கொண்ட அணி அமைந்தால் அதற்கு தோனி தான் கேப்டனாக இருப்பார். தோனியிடம் இன்னும் பேசவில்லை. கண்டிப்பாக அவரிடம் பேசுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது