பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை: குஜராத்தில் தொடக்கம்!

பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை: குஜராத்தில் தொடக்கம்!

குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கென தனி ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது

இது முற்றிலும் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை ஆகும். குஜராத் மாநிலம் சூரத் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் ஆட்டோவின் ஓட்டுநராகவும் பெண்களே பணியாற்றுகின்றனர். இதற்காக ஆட்டோ ஓட்டுவதில் நன்கு பயிற்சி பெற்ற பெண்களை தேர்வு செய்து அவர்கள் குறைந்த வட்டியில் லோன் மூலம் ஆட்டோ வாங்கவும் சூரத் நகராட்சி உதவி புரிகிறது.

இதுகுறித்து, சூரத் நகராட்சியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: இதில் 15 பெண்கள் ஏற்கனவே தங்கள் பணியை தொடங்கி விட்டனர். பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளை ஆட்டோ மூலம் கொண்டு செல்லும் பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். அதன்பின் மற்ற பயணிகளுக்காக தங்கள் பணியை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூபாய் 18,000 வரை சம்பாதிக்கின்றனர் என்று அவர் கூறினார்.