ஆசிய தடகள சாம்பின்ஷிப்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

ஆசிய தடகள சாம்பின்ஷிப்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

ஒரிசாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளனர்.

ஒரிசாவின் புவனேஷ்வர் நகரில் ஜூலை 6 முதல் 9 வரை நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் தினமும் பல பதக்கங்களைக் குவித்து அசத்தினர்.

நேற்று (ஞாயிற்றுகிழமை) முடிவடைந்த இத்தொடரில் இந்தியா 29 பதக்கங்கள் பெற்று முதலிடம் பெற்றது. 12 தங்கம், 5 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் பெற்றிருக்கின்றனர். இதன்ம மூலம், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் தடவையாக இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்று தொடரை நிறைவு செய்துள்ளது.

இத்தொடரில் இந்தியா பெற்ற அதிகபட்ச பதக்கங்களும் இதுவே ஆகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்துள்ள சீனா 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்க்களைக் கைப்பற்றியுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளிலிருந்து 800க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டன. இத்தொடரில், இந்தியா மற்றும் சீனா தவிர மற்ற நாடுகளின் பதக்க எண்ணிக்கை இரண்டு இலக்கத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.