மழை வேண்டி மிளகாய்பொடி அபிஷேகம்

மழை வேண்டி மிளகாய்பொடி அபிஷேகம்

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உள்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 08 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

 இதனை முன்னிட்டு கைலாசநாதர் கோயிலில் இருந்து  பெண்கள் பால்குடத்தை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள்  வழியாக சென்று  அங்காளம்மன் கோயிலை அடைந்தனர். பின்னர் அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்கள்  விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக கைலாசநாதர் கோயில் முன்பு  மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலன்கருதியும் பக்தர்களுக்கு மிளகாய்பொடி  அபிஷேகம்  நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியினை கரைத்து ஊற்றப்பட்டது இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.