அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம்

அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம்

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பத்தேர் உற்சவம்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 4-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், 7-ந்தேதி பெரிய தேரும், 8-ந்தேதி சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப உற்சவம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் நேற்று அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் லாரிகள் மூலமும், பொது மக்கள் குடங்கள் மூலமும் தண்ணீர் ஊற்றினார்கள். இதனால் தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும் அளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து நேற்று இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது.