கள்ளழகருக்கு தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்பு..!

கள்ளழகருக்கு தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்பு..!

வைகை ஆற்றில் இறங்கிய பின்னர் மண்டகப்படி திரும்பும் அழகரை தண்ணீரை பீச்சியடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. 

இன்று காலை 6.20 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில், பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து அழகர் ராமராயர் மண்டகப்படிக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக வைகை ஆற்றிலிருந்து ராமராயர் மண்டபத்திற்கு அழகர் செல்லும் வழியில், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக அழகர் மீது தண்ணீரை பீச்சியடித்தனர். இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.