எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வசதிகளுடன் இன்ஃபோகஸ் டர்போ 5!

எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வசதிகளுடன் இன்ஃபோகஸ் டர்போ 5!

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வசதிகளுடன் மிகக் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேரந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் இன்ஃபோகஸ் இந்தியாவில் மார்க்கெட்டை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து இந்தியாவிலேயே மொபைல் போன்களைத் தயாரித்து விற்க அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

இதன்படி, அந்நிறுவனத்தின் புதிய வரவான இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் மொபைல் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் முதல் ப்ரீமியம் மொபைல் வாடிக்கையாளர்கள் வரை அனைவரது எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் அட்டகாசமான வசதிகளை அளிக்கிறது.

2GB RAM மற்றும் 16GB ROM கொண்ட வேரியண்ட் ரூ.6999 க்கும் 3GB RAM மற்றும் 32GB ROM கொண்ட வேரியண்ட் ரூ.7999 க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் வாங்கலாம்.
இந்த இரு வேரியண்ட் மொபைகளிலும் மிகச்சிறந்த அம்சம் 5000mAh பேட்டரி. அதிக நேரம் பயன்படுத்தினாலும் இரண்டு நாட்களுக்கு முழுமையாக தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது இந்த பேட்டரி.