டூ வீலர் விற்பனையில் இந்தியாதான் கெத்து தெரியுமா?

டூ வீலர் விற்பனையில் இந்தியாதான் கெத்து தெரியுமா?

2016-ஆம் ஆண்டில் சீனாவை விட அதிக அளவு டூ வீலர் விற்பனை செய்துள்ளது இந்தியா.

உலகின் மிகப்பெரிய இரண்டு நுகர்பொருள் சந்தைகளாக கருதப்படுபவை இந்தியாவும், சீனாவும். இந்த ஊர்களில் எந்த தொழிலை துவங்கினாலும் அந்த தொழில் பெரும் வெற்றியடையும் என்பது உலக நாடுகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

இப்படி இந்தியா மற்றும் சீனாவில் வளர்ந்து வரும் துறையாக பார்க்கப்படும் ஆட்டோ மொபைல் துறையில், டூ வீலர்கள் விற்பனை முக்கிய இடம் வகிக்கின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக டூ வீலர் விற்பனையில் முதலிடம் வகித்து வந்த சீனாவை, 2016-ஆம் ஆண்டு பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது இந்தியா.