டொயோடா நிறுவனத்தின் இன்னோவா டௌரிங் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!

டொயோடா நிறுவனத்தின் இன்னோவா டௌரிங் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!

டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம், அதன் புதிய தயாரிப்பாக, இன்னோவா டூரிங் ஸ்போர்ட் என்ற காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த டொயோடா நிறுவனம், இந்திய சந்தையிலும் கார்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த 1997ம் ஆண்டு குவாலிஸ் ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, முழுவீச்சில் கார் விற்பனையை இங்கே தொடங்கியது.

இந்நிலையில், 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்னோவா காரின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக, இன்னோவா டூரிங் ஸ்போர்ட் ரகக் காரினை தயாரித்து, தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

இந்த கார், பெட்ரோல், டீசல் என்ஜீன்கள் பொருத்தப்பட்டதாக, வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.17.79 லட்சம் தொடங்கி, ரூ.22.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து நவீன அம்சங்களையும் கொண்டதாக, இந்த கார் இருப்பதால், பல தரப்பினரும் விரும்புவார்கள் என்று, டொயோடா இந்தியா குறிப்பிட்டுள்ளது.