தரிசு நிலத்தில் லாபம் தரக்கூடிய தாவரப்பயிர்கள்!..

தரிசு நிலத்தில் லாபம் தரக்கூடிய தாவரப்பயிர்கள்!..

மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது.சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும்

சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.


இதுதவிர மூலிகை சோப்பு, ஷாம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது வெய்யில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும்.

இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் தரிசு நிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்டு வருகிறது.