எஸ்பிஐ வங்கி ஆபீசர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

எஸ்பிஐ வங்கி ஆபீசர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன், சிறப்பாக இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2,313 புரபேஷனரி ஆபீஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற மெயின் தேர்வின் முடிவுகள் பாரத ஸ்டேட் வங்கியின் http://sbi.co.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரிலிமினரி தேர்வுகள் நடைபெற்றன. தற்போது மெயின் தேர்வில் தேர்வர் பெறும் மதிப்பெண்களை கணக்கிட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஐ.பி.பி.எஸ். எனப்படும் பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்தி தேர்வு செய்து குறிப்பிடத்தக்கது.