மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது.

இன்று துவங்கப்பட்ட இந்த விண்ணப்ப விநியோகம் வருகிற ஜூலை 7ஆம் தேதி வரை வழங்கப்படும். ஜூலை 8ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 3050 மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் உள்ளன. இதில், மத்திய அரசுக்கு 15% இட ஒதுக்கீடும், மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீட் தேர்வு அடிப்படையில் மாநில அரசு வருகிற ஜூலை 14ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 17ஆம் தேதி முதல் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.