அடுத்த வெளியீட்டிற்கு தயாராகும் நோக்கியா

அடுத்த வெளியீட்டிற்கு தயாராகும் நோக்கியா

நோக்கியா 3310 மொபைல் போனினை தொடர்ந்து புதிய பீச்சர் போன் ஒன்றை வெளியிட நோக்கியா தயாராகி வருவது தெரியவந்துள்ளது.

புதிய பீச்சர் போன் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 மொபைல் போன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், புதிய நோக்கியா போன் விரைவில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது.  

சீனாவின் TENAA தளத்தில் TA-1017 மாடல் நம்பரில் காணப்பட்ட பீச்சர் போன் வழக்கமான வடிவமைப்பு மற்றும் அதிக உறுதி தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. போனின் பின்புறம் ஸ்பீக்கர் க்ரில் மற்றும் கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் சிறிய டிஸ்ப்ளே, கீபோர்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

புதிய பீச்சர் போனில் 3ஜி கனெக்டிவிட்டி, டூயல் சிம் சப்போர்ட், வழங்கப்படும் என்றும் இதன் விலை மற்றும் வெளியீடு குறித்து எவ்வி தகவலும் இல்லை. முன்னதாக நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் போன்களை எச்எம்டி குளோபல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது.