புதிய நுண்ணுயிரிக்கு கலாம் பெயர் சூட்டிய நாசா

புதிய நுண்ணுயிரிக்கு கலாம் பெயர் சூட்டிய நாசா

நாசா விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரிக்கு மறைந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரைச் சூட்டி கவுரவித்துள்ளனர்.

இந்த நுண்ணுயிரி ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படக்கூடிய ஒன்றாகும். இந்த  உயிரினத்தை பூமியில் காணமுடியாது என கூறப்படுகிறது. ‘நாசா’வின் முக்கிய ஆய்வுக்கூடமான ‘ஜெட் புரோலிபியன் லேபாரட்டரி’யின் ஆராய்ச்சி விஞ்ஞானிகள், சர்வதேச விண்வெளி நிலைய வடிகட்டிகளில் ஒருவிதமான  புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினத்துக்கு ‘சொலிபாசில்லஸ்  கலாமி’ என பெயர்ச் சூட்டி இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானியான அப்துல் கலாமை  கவுரவித்துள்ளனர்.