பிக்பாஸ் வீடு பிரச்னையால், கமல் வீட்டுக்கு பாதுகாப்பு!

பிக்பாஸ் வீடு பிரச்னையால், கமல் வீட்டுக்கு பாதுகாப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதால் அதை நடத்தும் நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பல, சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ''இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்கள் ஆபாசமான வார்த்தைகளை பேசி வருகின்றனர். 75% அரைகுறை ஆடையுடன் வருகின்றனர். இது தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரானதாக இருக்கிறது. எனவே இதை தொகுத்து வழங்கும் நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து கமல் கொடுத்த விளக்கத்தின் போது, “தமிழக அரசில் எல்லாத்துறையிலும் ஊழல் பெருகி உள்ளது.” என பதிலளித்தார். இந்நிலையில் கமல்ஹாசன் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்து மக்கள் கட்சியினர் கமல் வீட்டின் முன் ஆர்பாட்டத்தை தொடங்கியுள்ளனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள தொலைக்கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும்.