வைரலாகும் 'தங்க தளபதி' விஜய்!

வைரலாகும் 'தங்க தளபதி' விஜய்!

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் தங்க தளபதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள இளையதளபதி விஜய் வரும் 22-ம் தேதி தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள்  இப்போதே தொடங்கி விட்டனர். இந்நிலையில், வரும் 22-ம் தேதி இளையதளபதி விஜய்யின் புகழ் பாடும் தங்க தளபதி பாடல் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக  #ThangaThalapathy என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், டுவிட்டரில் CZAR VIJAY BDAY COMMON DP என்று ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி  வருகிறது. விஜய்யின் தங்க தளபதி டிபி இணையத்தில் வைரலாகி வருகிறது.