தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியது.  முதல்வர், அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 18-ம் தேதியே  தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் திமுக  எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்ய போலீசார் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து  தொடர்ந்து முழு விவாதம் நடத்த முடியாது என்று சபாநாயகர் கூறியுள்ளார்.  இதனால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய, மு.க.ஸ்டாலின், முதல்வர், அமைச்சர்கள் மீது  வழக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 18-ம் தேதியே தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியது. தேர்தல் ஆணையம் உத்தரவு  குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதாகவும், இதுபற்றி தனக்கு தெரியாது என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.